Ad Widget

வேலணையில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை

குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வேலணை பிரதேச சபை விசேட அட்டவணையை தயாரித்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வேலணை பிரதேச சபை தவிசாளரிடம் விசேட பணிப்புரை வழங்கினார்.

off3

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தீவகத்தின் வேலணை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுகளில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன்போது, வேலணை பிரதேச செயலர் பிரிவிலுள்ள சாட்டிப்பகுதியிலுள்ள கிணறுகளில் குடிநீர் தேவைக்கான நீர் பெறப்பட்டு வருகின்றது. தற்போதைய வரட்சி நிலையினை அடுத்து கிணறுகளில் நீர் குறைந்து வருவதினால் மாற்றீடாக முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் விசேட கவனம் செலுத்தப்பட்டன.

வேலணை பிரதேச செயலர் பிரிவிலிருந்து ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவதனால் எதிர்காலத்தில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படும் அசௌகரியம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நேர அட்டவணையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு துறைசார்ந்தோருக்கு பணிப்புரை விடுத்த அமைச்சர் அவர்கள் அங்குள்ள குழாய் கிணற்றை வரிச்சலுகையடிப்படையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே வேலணை பிரதேச செயலர் பிரிவிலுள்ள சாட்டி, நயினாதீவு, மன்கும்பான் ஆகிய பகுதிகளிலிருந்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக அமைச்சரிடம் பிரதேச செயலர் மற்றும் தவிசாளர் ஆகியோரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து சட்டவிரோத மணல் அகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு அமைச்சர் தொலைபேசி வாயிலாக பணிப்புரை விடுத்தார்.

இதன்போது வேலணை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன், ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம், ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளர் ஜெயகாந்தன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா (போல்) ஆகியோருடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, சுற்றுசூழல் அதிகார சபை உள்ளிட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Related Posts