Ad Widget

வெள்ளிக்கிழமை நாடு முடக்கப்படாவிட்டால், அது திங்களன்று கட்டாய முடக்கத்துக்கு வழிவகுக்கும்!!

14 நாள்களுக்கு நாடு முழுவதையும் தனிமைப்படுத்துமாறு அரசிடம் வலியுறுத்தி இன்று நாட்டின் பல மருத்துவமனைகளுக்கு முன்னால் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமாக முடக்கப்பட்டால், நாட்டின் சுகாதாரத் துறைக்கான 100 சதவீத பொறுப்பை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்கும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

எவ்வாறாயினும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாடு முடக்கப்படாவிட்டால், திங்கட்கிழமைக்குள் முடக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

விஞ்ஞான முடக்கம் ஏற்பட்டால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு பிசிஆர் அல்லது அன்டிஜன் பரி்சோதனைகள் நடத்துவதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஒரு வெற்றிகரமான திட்டத்தை தனது சங்கம் கொண்டுள்ளது என்று சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ரவி குமுதேஷ் வலியுறுத்தினார்.

Related Posts