Ad Widget

வெளி நாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் : வட மாகாண முதலமைச்சர்

யாழ்ப்பாணத்தில் உலக வங்கியின் நிதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
திட்டங்களுக்கான பொறியியலாளர்கள் பற்றாக் குறையாகவுள்ளதனால் வெளி நாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புலம்பெயர் பொறியியலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்

உலக வங்கியின் நிதி திட்டம் தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள்மற்றும் வட மாகாண முதலமைச்சர் தலமையிலான குழுவினருக்கும் இடையில் பேச்சவார்த்தை நடைபெற்றது.

முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதலமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல திட்டங்களுக்கான பொறியியலாளர்கள் பற்றாக்குறையாகவுள்ளமையே அத் திட்டங்களை ஆரம்பிப்பதில் உள்ள ஒரே தடையென உலக வங்கிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் முதலமைச்சர் கூறினார்.

கருசணை கொண்ட புலம்பெயர்ந்தவர்களிற்கான ஓர் வாய்ப்பாக அதனைக் கருதி அதிக வருமானத்தினை எதிர்பார்க்காது தாயகத்திற்கான ஓர் பணியாக கொண்டு சேவையாற்ற முன் வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts