Ad Widget

வீமன்காமம் வடக்கில் இராணுவ பயிற்சி முகாம்

வீமன்காமன் வடக்குப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணியில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்று செயற்பட்டுள்ளமையை அங்குள்ள பயிற்சி உபகரணங்கள் மூலம் அறியமுடிகின்றது.

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 613 ஏக்கர் காணிகளை மக்கள் பார்வையிடுவதற்கு சனிக்கிழமை (11) அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, வீமன்காமம் வடக்குப் பகுதியில் இராணுவ பயிற்சி முகாம் இருந்ததுக்கான அடையாளங்கள் காணப்பட்டன. இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் உபகரணங்கள், நிலக்கீழ் நகரும் தளம் உள்ளிட்ட பல அங்கு காணப்பட்டன.

Related Posts