வீசாயின்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் ஐவர் கைது!!

முல்லைத்தீவு – குமுலமுனை பகுதியில் குடிவரவு – குடியகல்வு சட்டங்களை மீறும் வகையில் வீசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் ஐவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரஜைகளான 17, 33, 37, 40 மற்றும் 53 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts