விவசாய அமைச்சினால் பொருட்கள் அன்பளிப்பு

வடமாகாண விவசாய அமைச்சருக்கு நடப்பு ஆண்டுக்கென ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து கோண்டாவில் சோளந்தோட்ட இளைஞர் கழகத்துக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களும், கோண்டாவில் வாகீஸ்வரி கல்வி வளர்ச்சிக் கழகம் மற்றும் ஏழாலைமேற்கு ஸ்ரீவிநாயகர் ஐக்கிய நாணயச் சங்கம் ஆகிய அமைப்புகளுக்குக் கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.

1

4

3

2

விவசாய அமைச்சில் நேற்று நடைபெற்ற, மேற்குறிப்பிட்ட பொருட்களைக் கையளிப்பதற்கான நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன், மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.ஆர்னல்ட், ச.சுகிர்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

Related Posts