Ad Widget

ஆளுநரால் விளையாட்டு உபகரணங்கள்!, விழிப்புலனற்ற மாணவனுக்கு நிதி உதவி! வழங்கப்பட்டது

SportEquipmentஅளவெட்டி அருணோதயாக்கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கும் கோலூன்றி பாய்தல் உபகரணங்கள் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களால் நேற்று முன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

இப்பாடசாலைகள் இரண்டும் கோலூன்றிப்பாய்தலில் மாகாண மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபற்றி மாகாணத்திற்கு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுத்தந்தமையை ஊக்குவிக்கும் முகமாக ஒவ்வொரு பாடசாலைக்கும் இரண்டு லட்சம் பெறுமானமுள்ள கோலூன்றிப்பாய்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழிப்புலனற்ற மாணவனுக்கு ஆளுநரிடமிருந்து உதவி

VisuallyHandicappedBoyவிழிப்புலனற்ற மாணவனுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வொன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு மாணவனுக்கு காசோலையையும் வழங்கினார்.

இம்மாணவனுக்கு ஆளுநரிடமிருந்து ஏற்கனவே முதலாவது கட்டமாகவும் நிதி உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வழங்கப்பட்ட உதவியானது அம்மாணவனின் இரண்டாவது கண் சிகிச்சைக்கானது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை சேர்ந்த இம்மாணவன் க.பொ.த (உயர் தரம்) பரீட்சையில் 3 ”ஏ” சித்தி பெற்றுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts