Ad Widget

விளையாட்டுத் துறை ஆசியர்களுக்கு ‘வீரசூரி’ விருது

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினால் வடமாகாண மாணவர்களை விளையாட்டுத் துறையில் மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றிகளை பெறும் வகையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ‘வீரசூரி’ என்னும் விருது வழங்கி கௌரவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் இன்று (10) தெரிவித்தார்.

குறித்த விருதினை அறிமுகம் செய்வதன் மூலம் 2014ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்படுமென அவர் தெரிவித்தார்.

குறித்த விருது தமிழர்களின் மரபு வழிவந்த, மூதாதையர்களின் வழக்கத்திலிருந்து வந்த வீர விருதாக ‘வீரசூரி’ விருதினை அறிமுகப்படுத்துகின்றோம். இதனூடாக தேசிய ரீதியில் மாணவர்களை போட்டியிட வைத்து வெற்றிகளை சூடிய, சூடச் செய்யும் உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்படவுள்ளது.

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தில் இணைந்து கொண்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கே இவ்விருது வழங்கப்படவுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் தமது திறமைளை வெளிப்படுத்தி அர்பணிப்புடன் செயற்படுவதன் மூலம் சாதனையாளர்களாக வர முடியும்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இத்தகைய சாதனைகளை படைத்த உடற்கல்வி ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் விரைவில் இடம்பெறவுள்ளது.

இதன் மூலம் அர்ப்பணிப்புக்களையும் சமூக பொறுப்பையும் வெளிப்படுத்தக் கூடிய ஆசிரியர்களை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதுடன் சுயநலத்துடன் செயற்படும் ஆசிரியர்களை சிந்திக்க வைத்து ஒன்றுபடவும் ஐக்கியமான சூழலை உருவாக்கி தேசியமட்டம் என்ற இலக்கை எய்த வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts