Ad Widget

விபத்தில் வைத்தியர் காயம்

தொண்டைமானாறு அச்சுவேலி வீதியில் பிக்கப் வாகனமும் மின்பஸ்ஸும் நேருக்கு நேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை மோதியதில் வைத்தியர் ஒருவர் காயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வெங்கடாச்சலம் சுதர்ஷன் (வயது 27) என்ற வைத்தியரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.

கடமைகளை முடித்துவிட்டு, தனது பிக்கப் வாகனத்தில் வைத்தியர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் கூறினர்.

Related Posts