Ad Widget

விசேட தேவை­யு­டை­ய­வர்­களைப் பரா­ம­ரிக்க நடவ­டிக்கை – ப.சத்­தி­ய­லிங்கம்.

saththiya-lingamயுத்தத்தால் படுகாயமடைந்து அவயவங்கள் செயலிழந்த நிலையில் வாழுகின்ற விசேட தேவையுடையவர்களைப் பராமரிப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வடமாகாண சுகாதார அமைச்சர் ப . சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தால் படுகாயமடைந்து உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் படுத்த படுக்கையாக வடக்கில் சுமார் 200 இற்கு மேற்பட்டவர்கள் பாதிப்படைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களை அவர்களுடைய குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர் .

இவர்களுக்கு விசேட கவனிப்புக்கள், விசேட மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் போன்ற அனைத்துத் தேவைப்பாடுகளும் பூர்த்திசெய்ய வேண்டியுள்ளது.

மேலும் இவர்கள் பராமரிப்புடன் தொடர்புடைய விசேட பயிற்சி பெற்றவர்களால் பராமரிக்கப்பட வேண்டியுள்ளவர்களாகவுள்ளனர்.

இந்த நிலையினைக் கருத்தில் கொண்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வவுனியா பம்பைமடு என்ற இடத்தில் சுமார் 20 பேரைப் பராமரிக்கக்கூடிய வைத்தியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் .

இந்த வைத்திய நிலையத்தில் தங்கியிருந்து சேவைகளைப் பெற விரும்புவோர் தொடர்புகொள்ள முடியும்.

ஏனைய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் இத்தகைய ஏற்பாடுகள் மிக விரைவில் செய்து கொடுக்கப்படும் என்றார்.

Related Posts