Ad Widget

வாட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்!!

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாத துவக்கத்தில் பேஸ்புக் நிறுவனம் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷனை உருவாக்கிய வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலருக்கு கைபற்ற உள்ளதாக அறிவித்தது.

facebook-whatsapp

இந்த ஒப்பந்தத்தின் படி வாட்ஸ்அப் நிறுவனத்தின் பங்கு மற்றும் நிறுவன சொத்துக்கள் மொத்த மதிப்பு 22 பில்லியன் டாலர் அளவு உயர்ந்து திங்கட்கிழமை வாட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்.

மேலும் இந்த கைபற்றுதலின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜன் கோம் திங்கட்கிழமை காலையில் பேஸ்புக் நிர்வாக குழுவில் இணைந்தார்.

கலிபோர்னியாவின் மெலனோ பார்க் மாகாணத்தில் கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது. இதில் எந்த ஒரு நிறுவனமும் வாட்ஸ்அப் நிறுவனத்தை போன்று 22 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்து நிறுவனத்தை கைபற்றியதில்லை. காலிபோர்னியாவின் விலையுயர்ந்த ஒப்பந்தங்களில் ஒன்று.

இந்நிறுவன கைபற்றுதல் அறிவிப்பின் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் உயர்ந்தது. மேலும் திங்கட்கிழமை காலையில் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 21.8 பில்லியன் டாலர் மதிப்புடை பங்கு மற்றும் பத்திரங்கள் அளித்ததுமட்டும் அல்லாமல் இந்நிறுவன தலைவரை நிர்வாக குழுவில் இணைத்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், இந்தியா, மெக்சிக்கோ மற்றும் ரஷ்யா நாடுகளில் அதிகளில் வாடிக்கையாளர் உள்ளனர். மேலும் இந்நிறுவனத்திற்கு 500 மில்லியன் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் பேஸ்புக் நிறுவனம் பல நிறுவனங்களை கைபற்றிய நிலையில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு நிறுவனத்தை மட்டும் கைபற்றியுள்ளது. பெங்களுரூவ தலைமையகமாக வைத்து துவங்கப்பட்ட லிட்டில் ஐ லேப்ஸ் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் சுமார் 15 மில்லியன் டாலருக்கு கைபற்றியுள்ளது.

முழுமையான கைபற்றுதலின் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 32 சென்டுகள் உயர்ந்து 77.76 டாலர் என்ற விலைக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

மேலும் இதுவரை உலகின் முன்னணி சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் கைபற்றிய 10 நிறுவனங்களை பார்போம்.

அக்குலஸ் விஆர் இந்நிறுவனம்

3டி கேம்களில் பயன்படுத்தும் புதுமையான விர்ச்சுவல் ரியலிட்டி கிலாஸை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் துவங்கி வெறும் 2 வருடங்களே ஆன நிலையில் இந்நிறுவனத்தை 2 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கைபற்றியது.

வாட்ஸ்ஆப்

ஆன்லைன் மெசேஜ் ஆப் நிறுவனமான வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர் மதிப்பிற்கு கைபற்றியது. இந்நிறுவனம் கைபற்றியதில் அதிக மதிப்புடையது இதுவே.

பிரன்ச்

மக்கள் விரும்பும் செய்திகளை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வோர்டுபிரஸ் ஆகிய தளங்களில் பகிர்ந்து அதை குறித்த கருத்துகளை பகிரும் தளம் தான் பிரன்ச். இந்நிறுவனத்தை பேஸ்புக் 15 மில்லியன் டாலருக்கு கைபற்றியது.

லிட்டில் ஐ லேப்ஸ் மொபைல்

அப்பிளிக்கேஷன்களின் தகுதியை ஆராய்ந்து அதனை கண்கணிக்கும் ஒரு மென்பொருளை இந்நிறுவனம் தயாரித்தது. மேலும் இந்நிறுவனத்தை இந்தியாவில் இருந்து தனது தலைமையிடத்திற்கு மாற்றியது பேஸ்புக். பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் இருந்து கைபற்றிய ஒரே நிறுவனம் லிட்டில் ஐ லேப்ஸ் தான். இந்நிறுவனத்தை 10 மில்லியன் டாலருக்கு கைபற்றியது பேஸ்புக்.

அட்லாஸ்

பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரங்களை தனது வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்ல ஒரு கருவி தேவைப்பட்டது. அதற்காக மைக்ரோசாப்ட் அட்லாஸ் அட்வடைசர்ஸ் சூட் நிறுவனத்தை 100 மில்லியன் டாலர் மதிப்பிற்கு கைபற்றியது.

பேஸ்.காம்

முகத்தினை அடையாளம் கானும் மென்பொருளை உருவாக்கிய நிறுவனம், இத்தகைய மென்பொருளை எந்த ஒரு பிறமென்பொருளிலும் உபயோகம் செய்ய வழிவகை செய்து இருந்தது. இதனை கருத்தில் கொண்ட பேஸ்புக் நிறுவனம் 100 மில்லியன் டாலர் மதிப்பிற்கு கைபற்றியது.

கர்மா

பரிசுகளை வழங்கும் நிறுவனமான கர்மா நிறுவனத்தை ஒரு சிறிய தொகைக்கு கைபற்றியது பேஸ்புக். இதன் முலம் பேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தனது நன்பர்கள் மற்றும் விருப்பமானவர்களுக்கு அதிர்ச்சியுட்டும் வகையில் பரிசுகளை முடியும்.

லைட்பாக்ஸ்

மொபைலில் படத்தை பரிமாற்றம் செய்யும் ஆண்டிராய்டு ஆப்பை உருவாக்கிய லைட்பாக்ஸ் நிறுவனத்தை பேஸ்புக் கைபற்றியது. இந்நிறுவனத்தை கைபற்றிய முதல் பேஸ்புக்கின் கேமார அப்பை புறக்கனித்து லைட்பாக்ஸ் மென்பொருளை அமைத்தது.

இன்ஸ்டாகிராம்

மொபைலில் நாம் எடுக்கும் புகைபடத்தை பகிரும் ஒரு மென்பொருளான இன்ஸ்டாகிராமை பேஸ்புக் நிறுவனம் 1 பில்லியன் டாலருக்கு கைபற்றியது.

ஸ்கைப்

பேஸ்புக் வலைதள வாடிக்கையாளர் சுலபமாக வாய்ஸ் சாட் மற்றும் விடியோ சாட் செய்ய எதுவாக இருக்கும் வகையில் ஸ்கைப் நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டது பேஸ்புக்.

பிரன்டுபீடு

அனைத்து சமுக வலைதள நன்பர்களை ஒரே முனையில் இணைக்கு முயற்சியை பிரன்டுபீடு நிறுவனம் செய்து வந்தது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பயந்த பேஸ்புக் இந்நிறுவனத்தை 50 மில்லியன் டாலருக்கு கைபற்றியது.

Related Posts