Ad Widget

வல்வெட்டித்துறை கடலில் காணாமல் போனவர் 2 தினங்களின் பின்னர் சடலமாக மீட்பு

body_foundஇடிமின்னல் தாக்கி வல்வெட்டித்துறை கடலில் காணாமல் போயிருந்தவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மீன்பிடியில் ஈடுபட்டுவிட்டு கரைதிரும்பிக் கொண்டிருந்த வேளை இடிமின்னல் தாக்கி படகில் இருந்து தூக்கி வீசப்பட்டு காணாமல் போயிருந்தவர் இன்று காலை 7 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். குடாவில் நேற்று முன்தினம் மாகாசென் புயல்வீசியதுடன் இடிமின்னலுடன் பலமான மழையும் பெய்தது. அந்த வேளையில் வல்வெட்டுத்துறை கடற்பரப்பில் கரை திரும்பிக் கொண்டிருந்த இருவர் மீது இடிமின்னல் தாக்கியது.

இதில் படகில் இருந்த ஒருவர் படகிலிருந்து கடலுக்குள் தூக்கி வீசப்பட்டார். மற்றையவர் காயங்களுக்குள்ளான நிலையில் பலமணி நேரத்தின் பின்னர் கரைதிரும்பினார்.

நேற்று முன்தினம் காலை 10 மணியில் இருந்து 25 படகுகளில் காணாமற் போனவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் நேற்றுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்தும் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 7 மணியளவில் கடற்கரையில் இருந்து சுமார் 2km அப்பால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆதிகோவிலடி கடற்றொழிலாளர் சங்கத் தவைலர் மதியழகன் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த தங்கவேலாயுதம் அருளானந்தம் ( வயது 18) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

தொடர்புடைய செய்தி

வல்வெட்டித்துறையில் தொழிலுக்கு சென்ற மீனவர் கடலில் மாயம்

Related Posts