Ad Widget

வலி.வடக்கு வீடழிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு -இரா.சம்பந்தன்

sampanthan_-330x250வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுடன் இரண்டொரு தினங்களுக்குள் பேச்சு நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வலி.வடக்கில் 6 ஆயிரத்து 382 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளது. இந்தப் பகுதிகளைச் சூழப்பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்குள் உள்ளடங்கும் பகுதிகளில் உள்ள வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு நேற்று முயற்சி மேற்கொண்ட போதும் அவருடன் பேச முடியவில்லை என்றும், இரண்டொரு தினங்களில் இந்த விடயம் தொடர்பில் அவருடன் பேசப்படும் என்றும் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Related Posts