Ad Widget

வறுமைக்கோட்டுக்குள் வாழும் பெண்களின் வாழ்வியல் அபிவிருத்திக்கு உதவி – அரச அதிபர்

வறுமைக்கோட்டுக்குள் வாழும் பெண்களின் வாழ்வியல் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட சமூக அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது-

யாழ். மாவட்ட சமூக அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களில் 99 வீதமானவர்கள் பெண்களே உள்ளனர் என்பதனை நினைத்தால் பெருமையாகவுள்ளது. எனவே இந்தச் சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் அபிவிருத்தி செய்யும் வகையில் குடும்பத் தலைமைத்துவத்தை வகிக்கும், மற்றும் வறுமைக் கோட்டுக்குட்பட்டு வாழும் பெண்களின் சுயதொழிலுக்கு உதவியினை வழங்க வேண்டும். அத்துடன் இதற்குரிய இலகு கடனுதவிகளை வழங்கி சமூக அபிவிருத்தி பாதைக்கு எமது மாவட்டத்தை ஈட்டுச் செல்லவேண்டியது ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.

எனவே இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழில் உபகரணங்களை வழங்குவதற்கான என்னால் முடிந்த உதவிகளைப் விரைவாக பெற்றுத்தருவேன் – என்றார்.

Related Posts