Ad Widget

வரணியில் சட்டவிரோத மண் அகழ்வால் மக்கள் சிரமம்

manal-vadamarachcheyவரணி நாவற்காடு வெங்கி ராயன் வயல்வெளிகள் பெருமளவான பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மண் அகழ்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப் பகுதியில் உள்ள வயல் நிலங்கள், வயல் வரம்புகள் முதலானவற்றில் உள்ள மண்களை வெட்டி, உழவு இயந்திரங்கள் மூலமாக வெளியிடங்களிற்குக் கொண்டு சென்று விற்கப்படுகின்றன.

தொடர்ந்து இவ்வாறு மணல் அகழ்வதனால் கடல்நீர் வயல் நிலங்களிற்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவராக மாறும் அபாயம் உள்ளது.

மேலும் இவ் உழவு இயந்திரங்கள் இரவு மற்றும் அதிகாலை வேளைகளிலும் மணல் ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளின் துணையுடன் வீதியினைக் கடந்து செல்வதனைக் காணமுடிகின்றது.

எனவே குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் மணல் அகழ்வு நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டு என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts