Ad Widget

வட மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டது

appointment-IT-englihபட்டதாரி ஆசிரியர்களுக்கு வட மாகாண பாடசாலைகளில் நியமனம் வழங்கும் நிகழ்வு கோப்பாயிலுள்ள யாழ்ப்பாண கல்வியியற் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு 201 ஆசிரியர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கினார்கள்.

ஆளுநர் தனது உரையில், கணிதம், விஞ்ஞானம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் காணப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண கல்வியை கடுமையாக உழைத்து மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டுமெனவும் ஆளுநர் கேட்டுக் கொண்டார். அத்துடன் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து மாணவர்கள் பொதுப்பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற வழிகாட்ட வேண்டும் வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், பிரதி கல்விச் செயலாளர் திரு.பி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் வை.செல்வராசா, கல்வியியற் கல்லூரி முதல்வர் எஸ்.அமிர்தலிங்கம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Related Posts