Ad Widget

வட மாகாணசபை தேர்தலை நடாத்தினால் அது உயிர்தியாகம் செய்த வீரர்களை அவமதிக்கும் செயல்

chambika-ravakka-shambikkaசர்வதேச அழுங்களுக்கு அடிபணிந்து வடக்கில் மாகாணசபை தேர்தலை நாம் நடத்துவோமாயின் அது தாய் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களை அவமதிக்கும் செயல்’ என தொழில்நுட்ப மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.

ஜாதிக ஹெல உறுமய, கொழும்பு பொது நூலகதத்தில் நேற்று முன்தினம் நடத்திய இலங்கை யுத்த வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் ஈழயுத்தத்தை வென்றிருந்தால், கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இன்று உயிருடன் இருக்க முடியாது.

யுத்தம் வெற்றிகொள்ளப்படாதிருந்தால் இன்று அதிகம் பேசும் தமிழ், முஸ்லிம் அரிசயல் தலைவர்களுக்கு அமிர்தலிங்கத்தின் கதி ஏற்பட்டிருக்கும்

வெளிநாடுகளின் உதவியுடன் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் சம்பந்தன் ஆகியோர் இலங்கையை பழைய நிலைமைக்கு கொண்டுபோக முயற்சி செய்கின்றனர்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருந்தபோதும் அரசியலமைப்பு புரட்சி ஏற்பாடது போனமை ஒரு வரலாற்றுத் தவறு.
இதனால்தான், ஜாதிக ஹெல உறுமய 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை முன்னெடுத்தது என அவர் கூறினார்.

Related Posts