யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் முன்னிலையில் நேற்று (20) இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை யாழ். குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக அன்னலிங்கம் பிரேம்சங்கர், முஹமட் மக்கி ஆகியோரும், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு ஆணையாளராக கடமையாற்றிய மா.இளஞ்செழியன் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறித்த நியமனங்கள் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவினால் இந்த மாதம் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. புதிய நீதிபதிகள் அனைவரும் பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.