Ad Widget

வடமாகாண பூகோள வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்

வடமாகாண பூகோள வரைபடத்தில் எதிர்காலத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என இலங்கை நில அளவையியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட மாகாணத்திற்கு முழுமையான பூகோள வரைபடம் ஒன்று இருக்கவில்லை. தற்போது வடமாகாணத்தில் அபிவிருத்திகள் காணக்கூடியதாக இருப்பதால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பூகோள வரைபட திணைக்களமும் பங்களிப்பு செய்வதாகக் குறிப்பிட்டுள்ள, நில அளவைத் திணைக்களத்தின் நில அளவை அதிகாரியான மகேஸ் பெர்ணான்டோ,

அதன் அடிப்படையில் வட மாகாணத்துக்கு புதிய தனியான வரைபடம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இது தொடர்பில் வட மாகாண எல்லைகள் வரையறுக்கப்பட்டு வருவதாகவும் அதன் அடிப்படையில், 1 க்கு பத்தாயிரம் என்ற விகித அளவில் வடமாகாணத்தின் வரைபடம் ஒன்றை வரையத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் முழுமையான பூகோள விபரங்களை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் பிரிவுக்கு வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பான உடன்படிக்கை ஒன்று இலங்கைக்கும், ஐக்கிய நாடகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான குழுவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts