Ad Widget

வடமாகாண ஆளுநர் நம்பிக்கை நிதியத்திலிருந்து மருத்துவ உதவிகள்

GA Chandrasiriவடமாகாண ஆளுநர் நம்பிக்கை நிதியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 59 பேருக்கு மருத்துவ தேவைக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (10) பிற்பகல் ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உரையாற்றுகையில், ‘வடமாகாண ஆளுநர் நம்பிக்கை நிதியத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மருத்துவ தேவையுடைய 287 பேருக்கு 14.76 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.

‘இந்த நன்கொடைக் கொடுப்பனவுகள், புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக நோய்கள் போன்ற தீவிரமானதும், அபாயமானதுமான நோய்களின் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்த உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி ஒருவர் 25 ஆயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ரூபா வரையிலும் மருத்துவ உதவிகள் பெறுகின்றனர். அத்துடன் ஆளுநர் நம்பிக்கை நிதியிலிருந்து தலங்களின் பராமரிப்பிற்காக 40 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக’ ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Related Posts