Ad Widget

வடமாகாண ஆளுநர், கல்வி அமைச்சர் ,கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றி வழக்கு தாக்கல்

alunar-santherasriவடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றத்தின் போது பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பூநகரி கோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து உச்ச நீதிமன்றில் நேற்று அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

2012ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தின்போது தகுதியிருந்தும் தமக்கான ஆசிரிய இடமாற்றம் வழங்கப்படவில்லையென்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தகுதியில்லாத ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தின் போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்மனுவில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, கல்வி அமைச்சர் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related Posts