Ad Widget

வடக்கைச் சேர்ந்தோருக்கான வாழ்க்கைத் தொழிற்திறன் பயிற்சிகள் அதிகரிக்கப்படவுள்ளன

Vocational trainingகிளிநொச்சியிலுள்ள இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிலையத்தில் (SLGTI) மேற்கொள்ளப்படவுள்ள பயிற்சிகளுக்குத் தயார்படுத்துவதற்காக இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு அரசசார்பற்ற வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்களான டொன் பொஸ்கோ தொழிநுட்பப் பயிற்சி நிலையம், ORHAN (ஊனமுற்றோருக்கான புனர்வாழ்விற்கான அமைப்பு) ஆகிய இரண்டுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றுடன் அண்மையில் கைச்சாத்திட்டது.

2015ம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ள இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிலையமானது “இலங்கையின் வடக்கிற்கான தொழிற்பயிற்சி” (VTN) முன்னெடுப்பின் அங்கமாகக் காணப்படுவதுடன், இலங்கை, ஜேர்மன் அரசாங்கங்களின் இணைந்த செயற்பாடாகும். வட மாகாணத்திலுள்ள உயர்கல்வியின் போது பாடசாலையிலிருந்து வெளியேறியவர்கள், வேலையற்ற அல்லது தகுதிக்குக் குறைவாகப் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இளைஞர்கள், அநுகூலமற்ற பின்புலங்களைக் கொண்ட இளைஞர்கள், யுத்தத்தால் விதவையானோர் உட்பட போரால் பாதிக்கப்பட்ட குடித்தொகைக் குழுக்கள் ஆகியவற்றின்தொழிற்திறன் பயிற்சி, தொழில் வாய்ப்புக்கள் ஆகியவற்றை இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிலையம் சிறப்பானவகையில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிலையமானது முழுமையாகத் தொழிற்பட ஆரம்பிக்கும்போது வழங்கப்படவுள்ள தேசிய தொழிற்பயிற்சித் தகுதி (NVQ) நிலை 5, 6 இற்கான பயிற்சி வகுப்புக்களுக்கு மாணவர்களைத் தயார்செய்வதற்கான தேசிய தொழிற்பயிற்சித் தகுதி நிலைகள் 3, 4 ஐ வழங்குவதற்காக வட மாகாணத்தில் தற்போது 8 ஊட்டல் பயிற்சி நிலையங்கள் (FTCs) அடையாளங்காணப்பட்டுள்ளன.

ஊட்டல் பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் வணிகக் கற்கைநெறிகளில் உள்வீட்டு, பணிக்கான பயிற்சிநெறிகளில் பங்குபற்றுபவர்களில் கணிசமானோர் (30 சதவீதத்தை விட அதிகமாக) பெண்களாவர். வவுனியாவிலுள்ள டொன் பொஸ்கோ வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையம் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பப் பயிற்சிநெறியில் பங்குபற்றுபவர்களில் 100 சதவீதமானோர் பெண்களாவர். வவுனியாவில் அமைந்துள்ள மற்றொரு ஊட்டல் பயிற்சி நிலையமான ஊனமுற்றோருக்கான புனர்வாழ்விற்கான அமைப்பின் 70 சதவீதமான பங்குபற்றுபவர்கள் அங்கவீனமடைந்தோர் ஆவர். அந்த இடங்களில் காணப்படும் விசேட தேவையுடைய குடித்தொகைக்கு சிறந்த சமூக, பொருளாதார தன்மேம்பாட்டினை ஏற்படுத்தும் நோக்குடன் அங்கவீனமடைந்தோருக்கான பயிற்சிநெறிகளை வழங்குவதற்கு இந்நிலையம் தயாராகியுள்ளது.

மேற்குறிப்பிட்டவற்றிற்கு மேலதிகமாக மூன்று புதிய தொழிற்பயிற்சி நிலையங்களும், மூன்று முன்னைய கல்வி அங்கீகார (Recognition of Prior Learning ) நிலையங்களும் கனேடிய உலக பல்கலைக்கழக சேவைகளின் (WUSC) உதவியுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களில் வாழ்க்கைத்

Related Posts