Ad Widget

வடக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர்!

ஆட்சிமாற்றத்தின் பின்னரும் வடமாகாண ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர், இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடிக்காமல் தடுக்கப்படவேண்டும் என சர்வதேச ஊடக கூட்டமைப்பு (IFJ ) தெரிவித்துள்ளது.

யாழ். குடாநாட்டுக்கு வருகைதந்திருந்த குறித்த அமைப்பினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

அதன் பின்னர் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர்கள் கூறியதாவது,

ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரான காலப்பகுதியில் வெளிப்படையான வன்முறைகள் இல்லையென சகல பத்திரிகையாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தண்டணையின்மை குறித்த கவலைகள் காணப்படுகின்றன.

வடக்கில் 2000மாம் ஆண்டிலிருந்து 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காணாமற் போயுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

இதற்கான பொறுப்பு கூறப்படவில்லை சீர்திருத்த நடைமுறையின் பகுதியாக திறந்த விசாரணைகள் நடத்தப்படவேண்டியது அவசியமாகும்.

பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்துவதில் ஏற்கக்கூடிய வகிபங்கினை பத்திரிகை அமைப்புக்கள் இனங்காண வேண்டும்.

இதேவேளை கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ். ஊடக அமையத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் சர்வதேச ஊடக அமைப்புக்களுக்கும் தாம் வலியுறுத்தி கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

100 நாள் புதிய அரசின் திட்டத்தின் கீழ் கட்டுப்பாடற்ற ஊடகம், மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான கடும் கண்காணிப்பு, நெறிப்படுத்தல், ஆகியவற்றினையும் உள்ளடக்க அவர்கள் வலியுறுத்தப் போவதாக தெரிவித்தனர்.

இக் குழுவில் அவுஸ்திரேலியாவின் கிரிஸ்தோமர் வாரென் , அமெரிக்காவை சேர்ந்த ஸ்கெற்சிறிமென் மற்றும் இந்தியாவின் சித்தார்த் வரதராஜன் ஆகியோர் உள்ளடங்கி இருந்தனர்.

Related Posts