வடக்கு அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு விரைவில் பொலிஸ் பாதுகாப்பு

DIG-policeவடக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டு யாழ்.மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மிக விரைவில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு சபை அவைத்தலைவர் பிரதிப்பொலிஸ் அத்தியட்சகருக்கு கடதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது எமது கடமை. இருப்பினும் கடந்த காலங்களில் அவர்களால் கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை.

எனினும் கடந்தவாரம் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானத்தினால் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் உறுப்பினர் அனந்தி சசிதரன் நேரடியாக என்னை சந்தித்து கடிதத்தினை ஒப்படைத்திருந்தார்.

அதன்படி அவற்றை நான் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவரது பதில் கிடைக்கப்பெற்றதும் மிகவிரைவில் அவர்களுக்கு பாதுகாப்பு பொலிஸ் அமர்த்தப்படவுள்ளனர்.

மேலும் அனுமதி கோராதவர்களும் தமக்கு பாதுகாப்பு தேவை என அனுமதி கோரினால் நாம் வழங்க தயாராக உள்ளோம்.

மேலும் அமைச்சர்களுக்கோ அல்லது உறுப்பினர்களுக்கோ ஏதாவது பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படுமானால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது எனக்கோ உடனடியாக தகவல் தந்தால் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.

அத்துடன் தற்போது யாழ். மாவட்டத்தில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்களில் இருந்தும் இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இல்லை.இலங்கை பிரஜைகள். நான் கட்சிபேதம் பாராட்டுபவன் இல்லை. எல்லோருக்கும் சமமான நடவடிக்கையே என்றார்.

தொடர்படைய செய்தி

வட. மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை – சீ.வி.கே.சிவஞானம்

Related Posts