Ad Widget

வடக்கில் 85 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியாது: கபே

Caffeகடந்த காலத்தில் அடக்கு முறைகளிற்கு மத்தியிலேயே மக்கள் தேர்தல்களில் வாக்களித்தார்கள். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அத்தகைய அடக்கு முறை நிறுத்தப்பட வேண்டும்’ என்று கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோண் தெரிவித்தார்.

‘மக்கள் தமது உரிமைக்கு அமைவாக தாங்கள் விரும்பும் பிரதிநிதியை தெரிவு செய்வதற்கு உதவுவதே எமது நோக்கம்.
இம்முறை தேர்தல் சுதந்தரமாகவும் சுயாதினமாகவும் இருக்கும் எனபதை உறுதியாக நாங்கள் நம்புகின்றோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

ஏனைய மாகாணங்களைப் போன்று நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமல் இங்கு அபிவிருத்தி நடைபெறுகின்றது.

இந்த தேர்தல் நடைபெற்ற பின்னர் அது ஒரு நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் செயற்படும் என்று நம்புகின்றேன்.

வடமாகாணத்தில் 85 ஆயிரம் பேர் அடையாள அட்டையின்றி இருக்கின்றார்கள் அதிலும் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 35 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டைபெற்றுக்கொடுப்பதற்கும் எம்மால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts