Ad Widget

வடக்கில் மீண்டும் இராணுவ சோதனைகள்!

army-ruwan-vanikasooreyaவட மாகாணத்திலும், யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த இராணுவம் தீர்மானித்து உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக கிளம்பி இருக்கும் ஜே. ஜி. செல்வநாயகம் அல்லது கோபி என்பவரையும், இவரது சகாக்களையும் கைது செய்கின்ற வேட்டையின் ஒரு பகுதியாக இது அமைகின்றது.

வடக்குக்குள் பிரவேசிக்கின்ற வாகனங்களை சோதனை இடுகின்ற நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. வாகன சாரதிகள் அடையாள அட்டை மூலம் ஆள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். கோபி வடக்கில் மறைந்து உள்ளார் என்று இராணுவ புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன, இவர் கைது செய்யப்படுகின்ற வரை இச்சோதனைகள் இடம்பெறும் என்று இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வன்னியசூரிய தெரிவித்து உள்ளார்.

புலிகள் மீண்டும் வருகின்றார்கள் என்கிற தலைப்பிலான பல தொகை துண்டுப் பிரசுரங்கள் பளையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டன. இதனோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரி – 56 ரக துப்பாக்கிகள், ஆர். பி. ஜி, மோட்டார் குண்டுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

பயங்கரவாதிகள் புத்துயிர் பெறுவதை அனுமதிக்கவே முடியாது என்று பேச்சாளர் மேலும் கூறினார்.

Related Posts