Ad Widget

வடக்கில், கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் கட்சித் தலைவர் சம்பந்தன் முன்னிலையில்?

tna_members_jaffnaஅண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிய தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

வட மாகாணசபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரனும், ஏனைய 29 உறுப்பினர்களும் யார் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

பதவிப் பிரமாணம் கட்டாயமாக ஜனாதிபதி அல்லது ஆளுநர் முன்னிலையில் செய்ய வேண்டிய சட்டத் தேவைகள் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் அடிப்படையிலேயே பதவிப் பிரமாண நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் கூட பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் கட்சித் தலைவர் சம்பந்தனின் முன்னிலையில் கூட பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வட மகாணசபையின் முதலமைச்சராக கட்சி விக்னேஸ்வரனை ஏக மனதாக தெரிவு செய்துள்ளதாக வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts