Ad Widget

வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைந்தால் மக்கள் வாழ்க்கை நிலை மேம்படும் – கேபி

KP-kumaran-pathmanathanவடக்கில் இராணுவ பிரசன்னம் குறைந்து சிவில் நிர்வாகம் அமைந்தால் அது மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டிற்கு உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆயுத தொடர்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் இருப்பது ஒரு வகையில் பாதுகாப்புக்கு உறுதுணை என்றாலும் மக்கள் அச்சப்படுவர் என கேபி இந்தியாவின் ´தி ஹிந்து´ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல்வாதிகள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் எழுந்துள்ள மாணவர் போராட்டம் 1970 காலத்தை தனக்கு ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள கேபி, அந்த காலத்தில் புலிகள் மாணவர்களை தங்கள் இயக்கத்திற்கு இணைக்க மூளைசலவை செய்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் உணர்வுபூர்வமான பிரச்சினையை கிளப்ப முயற்சிக்கின்றனர். மாணவர்கள் தங்கல் கல்வி மீது கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் அவர்களாக எதுவும் செய்ய மாட்டார்கள். அவர்கள் மத்திய அரசுடன் இணைந்து இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் புத்த பிக்குகள் தாக்கப்பட்டமை அடக்கமற்ற, மனிதாமிமானமற்ற செயல் என தெரிவித்த கேபி, அதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts