Ad Widget

வடக்கிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடையில் அழைத்து வர என்னால் முடிந்தது

வரலாற்றில் முதன்முறையாக வடக்கிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடையில் அழைத்து வர தன்னால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

maithripala-my3-may

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற விஷேட சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இனவாத கோசங்களினால் நாட்டை மீளவும் யுத்தத்தை நோக்கி நகர்த்தக் கூடாது, எனவும் இங்கு கருத்து வௌியிட்ட ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் நாடு சந்திக்கவுள்ள சவால்களை வெற்றி பெற தமிழ், சிங்களவர் மற்றும் முஸ்லிம் என அனைவரையும் ஒன்றிணைத்து முன்னோக்கி செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1977ம் ஆண்டு தோல்வியின் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நேர்ந்த நிலைமை எனக்கு நன்றாகத் தெரியும் என இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் அவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறுவதனை தடுக்க மனச்சாட்சிக்கு விரோதமின்றி அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

அத்துடன் தற்போது தன்னிடம் கட்சித் தலைவர் பதவியை ஒப்படைத்தால், அதை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts