இலங்கையில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மிக வேகமாக டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் என அண்மையில் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாக கொண்டு தெரிவித்துள்ளது டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவு.
ஆய்வின் அடிப்படையில் கம்பஹா கொழும்பு களுத்துறை குருநாகல் புத்தளம் கண்டி கேகாலை இரத்தினபுரி மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் டெங்கு நோய் உண்டாவதற்கான வாய்பு அதிகம் எனவும் மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஹசித் திசேரா கடந்த ஆண்டு மாத்திரம் டெங்கு நோயால் 32060 பேர் பாதிக்கப்பட்டதாகவும்,கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 4138 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.