Ad Widget

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விசேட சட்டமூலம் நிறைவேற்றம்

voters-listவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சில திருத்தங்களுடனேயே குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தவர்கள் முன்னர் இருந்த இடத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதோடு, இரண்டு இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை பதிவு செய்வதற்கான இந்த விசேட சட்டமூலம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கடந்த 5ம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts