Ad Widget

வடக்கின் மிதிவெடிகள் அகற்றுவதற்கு ஜப்பான் ரூ. 164 மில்லியன் உதவி

இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகளுக்கென ஜப்பான் 164 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. ஜப்பான் அரசு இலங்கை மனிதவள பாதுகாப்பு திட்டத்துக்கு மானியமாக 12 லட்சத்து 66,738 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

‘MAG (Mines Advisory Groups) மக்’ நிறுவனத்தினால் செயற்படுத்தப்படும் மன்னார் மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றுதலின் மூலம் மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க டொலர் 539,702 (ஏறக்குறைய ரூபாய் 70 மில்லியன்) மற்றும் டாஷ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிமூலம் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்துக்கு அமெரிக்க டொலர் 727,036 (ஏறக்குறைய ரூபாய் 94 மில்லியன்) வழங்கப்படும்.

இலங்கை அரசாங்கத்தின் கண்ணிவெடிகளை அகற்றி மக்களின் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி அடைய செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை கூடிய விரைவில் அடைவதற்கு இத்திட்டங்கள் உந்துகோலாக அமையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் விரைவு படுத்தப்பட்டமைக்கும். விவசாயம் மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கும் ஜப்பான் பெரும்பங்களிப்பை வழங்கியுள்ளது. 2003ம் ஆண்டிலிருந்து அமெரிக்க டொலர் 27 மில்லியன் தொகையை வட, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடியகற்றும் பணிகளுக்கு ஜப்பான் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts