Ad Widget

வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து, வங்கதேசத்தை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தமீம் இக்பால் 142 பந்துகளில் 128 ரன்களும், முஸ்பிகுர் ரஹிம் 72 பந்தில் 79 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் பிளங்கெட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து 306 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய களமிறங்கியது இங்கிலாந்து. அந்த அணி 47.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

அதிகபட்சமாக ஹேல்ஸ் 95 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். ஜோ ரூட் 133 (129 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), மார்கன் 75 (61 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேசம் தரப்பில் மொர்டசா, சபிர் ரஹ்மான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

சதம் விளாசிய ஜோ ரூட் ஆட்டநாகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Posts