ரி.ஐ.டி.யினரால் குடும்பஸ்தர் கைது

arrest_1கரவெட்டி கிழக்கு வளர்மதி சனசமூக நிலையத்தடியினைச் சேர்ந்த ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் இன்று (24) தெரிவித்தனர்.

கடத்தல் குற்றச்சாட்டு ஒன்றின் விசாரணைக்காகவே மேற்படி குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர் தற்போது யாழிலுள்ள ரி.ஐ.டி.யினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக கரவெட்டிப் பிரதேசத்தில் இன்று (24) பதற்ற நிலைமையொன்று உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts