Ad Widget

ரணிலா, கரு ஜயசூரியவா? ஐ.தே.க. தலைவர்! பலப்பரீட்சை இன்று!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவும், கரு ஜயசூரியவும் போட்டியிடவுள்ளனர்.தலைவர் பதவிக்கு எழுந்திருந்த நெருக்கடிக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வை எட்ட முடியாத நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பினை நடத்த நேற்று கூடிய செயற்குழு முடிவு செய்துள்ளது.இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இந்த இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

மேலும் பிரதி தலைவர் பதவிக்கும் தேசிய அமைப்பாளர் பதவிக்கும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதன் காரணமாக அந்தப் பதவிகளுக்காகவும் இன்றைய தினம் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அந்த வகையில் செயற்குழு உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த இரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்களவுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு இது தொடர்பான தேர்தலை நடத்தும் அதிகாரம் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணிக்கு மூன்று பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாலை 3 மணியளவில் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் மாநாடும் ஸ்ரீகொத்தாவில் நடத்தப்படவுள்ளது.

இது இவ்வாறு இருக்க கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த இரகசிய வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களிக்க முடியும் என்றும் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, கட்சித் தலைமையையும் ஏனைய பதவிகளையும் கைப்பற்ற ரணில் தலைமையிலான அணியினரும் சஜித் பிரேமதாஸ அணியினரும் கடும் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளனர்.

கருவை தலைமைப் பதவியில் அமர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது – தினமின

கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில அமர்த்தும் நோக்கில் நாடாளுமன்ற உறப்பினர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக தினமின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பல லட்ச ரூபா பணம் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று வர்த்தகப் பிரமுகர்களும், ஓர் ஊடக நிறுவனமும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவானவர்களே இவ்வாறு ரணிலை தோற்கடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நடைபெறவுள்ள தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பில் 96 செயற்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Related Posts