ஜெரோம் கொன்சலிற்றா(22) சடலமாக மீட்கப்பட்ட யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள பொதுக் கிணற்றினைச் சுற்றி கட்டப்பட்டிருந்த மறைப்புச் சுவர் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சில மாதங்களுக்கு முன்னரும் பெண்ணொருவரின் சடலம் மேற்படி கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாகவும், இவ் கிணற்றுக் அருகில் கூடும் சிலர் மது அருந்துதல், போதைப்பொரு பாவனை போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த கிணற்றின் மதில்கள் உடைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தினை அறிந்த குருநகர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றினை பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த மேற்படி யுவதியின் சடலம் கடந்த திங்கட்கிழமை (14) மேற்படி கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
யுவதியின் மரணத்திற்கு யாழ்.ஆயர் இல்லத்தினைச் சேர்ந்த இரு குருமார்களே காரணம் எனக்கூறி குறித்த யுவதியின் உறவினர்கள் ஆயர் இல்லத்தின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த கிணற்றில் மதில்கள் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
யுவதியின் சாவுக்கு நீதி வேண்டி ஆயர் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்