Ad Widget

யுத்தம் முடிந்து 3ஆண்டுக்குள் முழுமையான மீள்குடியேற்றம் சர்வதேசத்திற்கு காட்டவே அரசு மெனிக்பாமை மூடியது; த.தே.கூ குற்றச்சாட்டு

மெனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றப்படவில்லை அவர்கள் முல்லைத்தீவில் மற்றொரு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன்படி இன்றைய தினம் வவுனியா மெனிக்பாம் மூடப்படுவதுடன் அங்கிருந்த மக்களும் வெளியேறினர் ஆனாலும் அவர்கள் சொந்த இடத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை மீண்டும் முல்லைத்தீவில் ஒரு முகாமில் தங்க வைக்க ஏற்பாடாகி உள்ளது.

இதனையடுத்து வவுனியா மெனிக்பாம் முகாம் மூடப்படுவது தொடர்பில் அரசினால் வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் த.தே.கூ கூறியதாவது,

அனைவரையும் பிழையாக வழிநடத்தும் நோக்கில் மெனிக்பாம் முகாம் அவசரமாக மூடப்பட்டுள்ளது. அதனால் மக்களும் வெளியேற வேண்டும் இல்லையேல் முகாமில் தொடர்ந்தும் தங்கியிருந்தால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ்ந்த மக்கள் முற்று முழுதாக யுத்தம் முடிவடைந்த மூன்று ஆண்டுகளுக்குள் அரசினால் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் என சர்வதேசத்திற்கு வெளிக்காட்டவே அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, மெனிக்பாம் முகாமை அண்டிய பகுதிகளில் நிர்மானிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்டவை தொடர்ந்தும் இயங்கும் என வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts