யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 265 பேருக்கு கடனுதவி

cash-money-paymentயாழ்.மாவட்டத்தில் உள்ளவர்களில் யுத்தத்தில் பாதிப்புற்றவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அதன்படி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 177 பேருக்கும் சொத்தழிவு ஏற்பட்ட 44 பேருக்கும் அரச ஊழியர்களுக்கான நஷ்டஈடு கொடுப்பனவில் 44 பேருக்குமாக 265பேருக்கு உதவிக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பயனாளிகளுக்கான காசோலையினை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர வழங்கி வைக்கவுள்ளார்.

Related Posts