Ad Widget

யாழ். மாணவர்களை விடுதலை செய்யுங்கள்!; பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது.
தடுத்து வைத்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம் சர்வதேச சமுதாயத்திற்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்த இடமில்லாமல் செய்யமுடியும்.

இந்த மாணவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கவும் இல்லை. அவர்கள் முன்னர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கவும் இல்லை.

எனவே, இவர்களை விடுதலை செய்து பல்கலைக்கழகங்களை இயங்க வழிசெய்ய வேண்டும். என்று அந்த சம்மேளனத்தின் பேச்சாளர் டாக்டர் மஹிந்த மென்டிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது.

யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலைமையினால் யாழ்ப்பாண மக்களும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் பயப்பீதியில் உள்ளனர்.

இவர்கள் கெடுபிடிகளுக்கு முகம்கொடுத்து கொண்டிருக்கின்றனர். எழுந்தமானமாக கைதுகள் இடம்பெறும் போது அங்கு வழமையான நிலைமை இருக்கமுடியாது.

கடந்த நவம்பரில் மோதல் ஏற்பட்டதிலிருந்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் பல்கலைகழக மாணவர்கள் பலரை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இதுவரை 50 பேர் வரையில் யாழ்ப்பாணத்தில் கைதாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர் என்றார்.

Related Posts