Ad Widget

யாழ். மண்ணில் கால்பதிக்காத புலம்பெயர் தமிழர் காணி உரிமை கோருகொண்டாடுகின்றனர்: முதல்வர் கூறுகிறார்

யாழ். மண்ணில் கால்பதிக்காத புலம்பெயர் தமிழர்கள் 40 வருடங்களுக்கு பின்பு வந்து யாழ். மாநாகர சபைக்கு சொந்தமான காணியை உரிமை கொண்டாடுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குற்றம் சாட்டியுள்ளார்.யாழ். மாநாகர சபையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டவர்கள் வந்து யாழ்ப்பாணத்தில் எனக்கு காணி இருக்கிறது என தன்னோடு பிரச்சனைப்படுவதாகவும் தங்கள் காணிகளை யாழ்.மாநகர சபை சுவிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.உண்மையில் யாழ்.மாநகர சபை யாருடைய குறிப்பாக தனியாருடைய காணிகளை கையகப்படுத்தவில்லை. சரியான முறையில் காணி உறுதி இருக்குமானால் அந்தக் காணி உரித்துடையவர்களுக்கு சொந்தமாகும்.

யாழில் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வீதி அபிவிருத்தி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடத்தில் யாழ்.மாநகர சபையினால் 17 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.யாழ். கோட்டையானது மாநகர சபையினால் 60 மில்லியன் ரூபா செலவில் அழகுபடுத்தப்படவுள்ளது. அத்துடன் யாழ்.பொது நூலகம் 10 மில்லியன் ரூபா செலவில் வர்ணப்பூச்சுக்கள் பூசப்படவுள்ளது.

யாழின் நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்காக பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தக்கடவுள்ளன. யாழ் மாநாகர சபை எல்லைக்குட்பட்ட 47 குளங்கள் இருந்தன. தற்போது 32 குளங்களே இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

யாழில் குளங்களை அண்டிய பகுதிகளில் உள்ள சட்டவிரோதக் குடியேற்றங்கள் அகற்றப்படவுள்ளன. குறிப்பாக கன்னாதிட்டிக் குளப்பகுதியிலுள்ள சட்டவிரோதக் குடியேற்றங்கள் அகற்றப்படும்.இதேவேளை யாழ்.மாநகர சபையில் பதவி இழந்த நிஷாந்தனுக்குப் பதிலாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் செல்வராசா இரமணன் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts