Ad Widget

யாழ்.போதனா கொரோனா சிகிச்சை விடுதிகளை மீள திறப்பது தொடர்பில் ஆராய்வு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மீளவும் அதிகரித்துச் செல்லும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த கொரோனா சிகிச்சை விடுதிகளை மீளவும் இயக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொற்று அபாயம் அதிகரிக்கும் நிலையில் எடுக்கப்படவேண்டிய முன் ஆயத்த நிலைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் ஆராயப்பட்டதாக கூறப்படுகின்றது.

போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதிகள் 2 ஏற்கனவே இயங்கிவந்த நிலையில் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த நிலையில் அவை பயன்பாடற்று காணப்பட்டிருந்தன.

தற்போது தினசரி தொற்றாளர் எண்ணிக்கை மீள அதிகரிக்கும் நிலையில் குறித்த விடுதிகளை மீள திறப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. கடந்த 4 மாதகாலமாக 10க்கும் குறைவானனோரே யாழ்.போதனா வைத்தயசாலையின் தனிமைப்படுத்தல் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது. எனினும் ஒட்சிசன் தேவைப்பாடான நோயாளிகள் இதுவரை வரவில்லை என கூறப்படுகின்றது.

Related Posts