Ad Widget

யாழ்.பல்கலை வணிக பீடத்தின் சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கு!

JaffnaUniversity91 (1)யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதி, ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் முதலாவது சர்வதேச ஆய்வரங்கினைச் “சமகால முகாமைத்துவம்” என்னும் கருப்பொருளில் இன்று (14.03.2014) நடாத்தவுள்ளது.இந்த ஆய்வரங்கானது “நிலைத்திருக்கும் அபிவிருத்தியினை நோக்கி மனித வளத்தை வலுவூட்டல்” என்ற பொருளை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருடாவருடம் சமகால விடயங்களை மையமாகக் கொண்டு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது இப்பீடத்தின் விருப்பமாகும். இவ்வாய்வரங்கு கல்விசார் துறையினருக்கும், மாணவருக்கும் தமது ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிடுவதற்கான ஒரு தளமாக அமைகின்றது. இதற்குச் சான்றாக ஆய்வரங்கின் நிகழ்ச்சி நிரலில் மாணவர்களுக்கு தமது ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிடுவதற்கான ஒரு நிகழ்வு அமைந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

ஆய்வரங்கின் பொறுப்புக்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்பதின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி அதன் தலைவரைாகவும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ம.கருணாநிதி நிகழ்வின் அவைக் கூட்டுனராகவும் செயற்படுகின்றனர்.

ஆய்வரங்கத்தின் பிரதான நிகழ்வுகளாக ஆரம்ப நிகழ்வு, அரங்கக் கலந்துரையாடல் மற்றும் இறுதி நிகழ்வு என்பன யாழ்.பல்கலைக்ககழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளன.

இந் நிகழ்விற்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் பிரதம விருந்தினராகவும் , யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கே.கே.அருள்வேல் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஏனைய ஆய்வுக் கட்டுரைகளினை வெளியிடும் நிகழ்வுகள் ஏககாலத்தில் பல்கலைக்கழகத்தினுள் காணப்படக்கூடிய பல்வேறு விரிவுரை மண்டபங்களில் நடைபெறுவுள்ளன.

இம்முறை இந்த நிகழ்விற்கு 20 – 30 பல்வேறு துறைசார்ந்த கல்வியலாளர்கள் அயல் நாடுகளிலிருந்து வருகை தரவுள்ளனர். அதிகளவிலான வரவேற்பை பெற்றுள்ள இந்த ஆய்வரங்கிற்கு 250ற்கு மேற்பட்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவை கல்வியாளர்களால் மீளாய்வு செய்யப்பட்டு, அவற்றில் 150 அளவிலானவையே நிகழ்வில் வாசிப்பதற்கு ஏற்றவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் ஏறத்தாழ 30 ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச புலமையியலாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வரங்கின் ஒவ்வொரு நிகழ்விற்கும் அந்தத்த துறையில் நிபுணத்துவம் பெற்ற தேசிய மற்றும் சர்வதேச கல்வியலாளர்கள் இருவர் தலைமை தாங்கி நடாத்தவுள்ளனர்.

இருநாள் ஆய்வரங்கின் இறுதி நிகழ்வில் இந்தியாவின் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த போராசிரியர் ஆர்.ஸ்ரீரங்கநாதன் ஆய்வரங்கின் நிறைவுரையை நிகழ்த்தவுள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜு.மிகுந்தன் ஆய்வரங்கின் மதிப்பீட்டுரையை நிகழ்த்தவுள்ளார்.

இறுதியில் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

Related Posts