Ad Widget

யாழ். பல்கலைக்கான நிதிக் குறைப்பு; தேசிய நல்லிணக்கத்திற்கு சிக்கல்

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கான நிதியை குறைத்துவிட்டு தேசிய நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் பேசுவதாக மக்கள் விடுதலை முன்னணி சாடியுள்ளது.

கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாத்த்தில் பங்கேற்று உரையாற்றிய போது மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பனர் விமல் ரத்நாயக்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைகழகத்தில் சிங்கள முஸ்லீம் மாணவர்கள் அதிகளவில் உள்ளனர். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் யாழ் பல்கலைகத்திற்கான நிதி 50 மில்லியனால் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறைத்துவிட்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். வெட்கப்பட வேண்டும்.

யாழ் பல்கலைழகத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாத பிரச்சினையின்போது சில மாணவ தலைவர்கள், யுத்தத்தின் போது பெற்றோரை இழந்தவர்கள்.

அவர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுவது மிகவும் இலகுவானது.யாழ் பல்கலைகத்திற்கான நிதியை 50 மில்லியனால் குறைந்துவிட்டு எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் தேசிய நல்லிணக்கம் குறித்து பேசுகின்றனர்.

அதனால் தானோ பிரிந்து சென்று, அதிகளவு நிதியை பெற வேண்டும் என சம்பந்தன் நினைக்கின்றாரோ தெரியாது. ஹூருணு பல்கலைகழகத்தை எடுத்தால் கடந்த ஆண்டு 3300 ரூபா ஒதுக்கப்பட்டது.

ஆனால் இம்முறை 2900 ரூபாவாக அது குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைகத்திற்கும் கடந்த ஆண்டு 1600 மில்லியன் ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை அது 1400 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.அடுத்த்தாக ராஜரட்ட பல்கலைகழகம். குடிநீர் இல்லாமல் அந்த பல்கலைகழகம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சரே இதற்கு வெட்கப்பட வேண்டுமல்லாவா, உயர்கல்வி அமைச்சர்கள் இந்த நாட்டில் பலர் இருந்தனர். நீங்கள் வெட்கப்பட வேண்டும். குடிநீர் இல்லாமல் பல்கலைகழகம் மூடப்படுகின்றது. ஸ்ரீலங்காவிலேயே குடிநீர் இல்லாமல் மூடப்படும் பல்கலைகழகம் என்றால் அது ராஜரட்ட பல்கலைகழகமே என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts