Ad Widget

யாழ். பல்கலைக்கழக விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனை – மாணவர்கள் பதற்றத்தில்

jaffna-universityயாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுதிக் கொண்டு மாணவர்களுடைய தங்குமிட அறைகளை சோதனை மேற்கொண்டுள்ளதுடன், விடுதிக் காப்பாளர், மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அப் பகுதியில் பெருமளவிலான இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தின் பின்னணியில் தெரியவருவதாவது,

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களுக்கு மேல் நிலை வகுப்பில் கல்வி கற்கும் சிரேஸ்ட சிங்கள மாணவர்கள் பகிடிவதையாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முதலாம் வருடத்தை சேர்ந்த சிங்கள மாணவன் ஒருவர் பலமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று இரவு 7 மணியளவில் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என கூறிய நால்வர் எவ்வித அனுமதியுமின்றி விடுதியில் நுழைந்து அங்குள்ள மாணவர்களுக்கும் விடுதி காப்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.அத்துடன் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளையும் சோதனை செய்துவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் அதிகளவான இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக மாணவ தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுவதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சத்தில் உள்ளதாக அங்கிருந்து மேலும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts