Ad Widget

யாழ். ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் யார்?

புதிய அரசு அமையப் பெற்று 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாக, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் ஆறு மாத காலத்திற்கு மேலாகக் கூட்டப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குறித்த கூட்டங்களிலேயே அபிவிருத்தித் திட்டங்களுக்கான அனுமதிகள் பெற்றுக் கொள்ளப்படும்.

இதனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வருடத்தில் ஒரு தடவை இடம்பெறுவதுடன், பிரதேச ஒருங்கிணைப் புக் குழுக் கூட்டங்களும் அவ்வாறு இடம்பெற்று வந்தன.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மாத்திரம் நடத்தப்பட்டுவந்தன.

புதிய அரசு கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பின்னர், மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இன்னமும் நடத்தப்படவில்லை. அத்துடன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் யார் என்பது தொடர்பில் இன்னமும் மாவட்ட செயலகத்துக்கு அறிவிக் கப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தினாலேயே இது தொடர்பிலான அறிவித்தல்கள் வெளியிடப்படும்.
இதுவரை எந்தவொரு அறிவித்தல்களும் வெளியிடப்படாமையினாலேயே, மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இன்னமும் நடத்தப்படாமல் இருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

Related Posts