Ad Widget

யாழ். இந்து மாணவன் தேசிய மட்டத்திலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சாதனை

தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2012ம் ஆண்டுக்கான தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான உயரம் பாய்தலில் யாழ். இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செல்வன் இரத்தினசிங்கம் செந்தூரன் 192 சென்ரி மீற்றர் உயரத்தைக் கடந்து இந்த புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.

முன்னைய சாதனையான 190 சென்ரி மீற்றர் உயரத்தை 2004ம் ஆண்டு முறியடித்து 191 சென்ரி மீற்றராக பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2007ம் ஆண்டு இன்னொருவரால் அது சமன் செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் சுமார் 5 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனையை நேற்றைய தினம் யாழ் இந்துக்கல்லூரி மாணவன் 192 சென்ரி மீற்றர் உயரத்தைக் கடந்து முறியடித்துள்ளார்.

பாடசாலை மட்டத்திலும், வலய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் சாதனைகள் பலவற்றை நிலைநாட்டி வரும் இவர் வருடா வருடம் தனது சாதனைகளை தானே முறியடித்து புதிய சாதனைகளை நிலை நாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts