யாழ்ப்பாண கச்சேரியின் முன்னாள் பதிவாளராது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் மரண மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வழங்கியதாக குறித்த முன்னாள் பதிவாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பதிவாளர் இதற்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 80 லட்ச ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாண கச்சேரியின் முன்னாள் பதிவாளராக கடமையாற்றிய சின்னராசா சுபாராஜா என்பவரின் வங்கிக் கணக்கே முடக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உயிரிழந்த நபர்களின் மரண சான்றிதழ்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாகவும் பணம் பெற்றுக்கொண்டதாகவும் சுபாராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.