Ad Widget

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக்கின் முடிவுகள்

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவேண்டி – 20 துடுப்பாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, கிறாஸ்கோப்பர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன.

JPL-logo

யுவ பிரன்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட துடுப்பாட்டக் கழகங்களுக்கிடையில் டுவேண்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

மே மாதம் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டியில் 18 அணிகள் பங்குபற்றுவதுடன், முதற் சுற்று ஆட்டங்கள் லீக் முறையில் இடம்பெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற முதற்போட்டியில் ஜொலிஸ்ரார்ஸ் அணியினை எதிர்த்து தெல்லிப்பளை யூனியன்ஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ரார்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.மணிவண்ணன் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் யூனியன் அணி சார்பாக எஸ்.தீபன், ரி.பிரசாந்த் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

146 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யூனியன் அணி, 13.5 பந்துபரிமாற்றங்களில் 4 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எல்.ஆகீஷன் 65, எம்.ஜான்ஷன் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஜொலிஸ்ரார்ஸ் அணி சார்பாக எஸ்.மதுசன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.

இரண்டாவது போட்டியில் ஸ்ரீ காமாட்சி அணியினை எதிர்த்து மானிப்பாய் பரிஷ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற மானிப்பாய் பரிஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.சபேஸ் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஸ்ரீ காமாட்சி அணி சார்பாக, கே.கேதீஸ் 3, எஸ்.சுதர்சன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

133 என்ற வெற்றியிலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்ரீ காமாட்சி அணி, 16.4 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது, துடுப்பாட்டத்தில் கே.கஜீவராஜ் 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மானிப்பாய் பரிஷ் அணி சார்பாக க.பிரதீபன் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

மூன்றாவது போட்டியில் திருநெல்வேலி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கிறாஸ்கோப்பர்ஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற கிறாஸ்கோப்பர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதற்கிணங்கக் களமிறங்கிய திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.சுரேந்திரன் 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் கிறாஸ் கோப்பர்ஸ் அணி சார்பாக எஸ்.கபிலன் 3 இலக்குகளை வீழ்த்தினார்.

127 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கிறாஸ்கோப்பர்ஸ் அணி, 18.4 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் கே.கஜதீபன் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் திருநெல்வேலி அணி சார்பாக எஸ்.சுரேந்திரன் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

Related Posts