Ad Widget

யாழ்ப்பாணத்தில் திமுது ஆட்டிகல மீது கழிவு எண்ணெய் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வைத்து, முன்னணி சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல மீது கழிவு எண்ணெய் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தமக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து கழிவு எண்ணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முன்னணி சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பின்னர் கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போது நல்லூர் பகுதியில் வைத்து இன்று மாலை தம்மீது இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத ஆட்கள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக திமுத்து ஆட்டிகல தெரிவித்தார்.

இது தொடர்பில் தன்னுடன் வந்தவர்களுடன் சென்று யாழ்ப்பாணம் பொலிஸ்;நிலையத்தில் முறைப்பாடு செய்தாகவும், முன்னணி சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல கூறினார்.

சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பு என்ற வகையில் உலக சிறுவர் தினத்தை நினைவு கூறும் வகையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தோம்.

நேற்று குறித்த நிகழ்வு நிறைவடைந்த நிலையில் இன்று கொழும்புக்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.

அதன்போது எமது வாகனத்தை பின்தொடர்ந்து யாரோ இருவர் வருவதை உணர்ந்தோம். ஆனால் நாங்கள் அதனை பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை.

வர்த்தக நிலையம் ஒன்றிற்கு முன்பாக வாகனத்தை நிறுத்தி அதனுள் சென்று வந்த போதே சாணத்துடன் கலந்த, கழிவு எண்ணெத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது எனக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர்..

Related Posts