Ad Widget

யாழ்ப்பாணத்தின் வடகிழக்கில் 900 கிலோமீற்றர் தூரத்தில் மகாசென் சூறாவளி!

puyal-makesanவங்காளவிரிகுடாவில் தோன்றியிருந்த சூறாவளியானது இன்று அதிகாலை 02.00 மணிக்கு எமது திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட அவதானிப்பின் போது, யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக 900 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.இது இலங்கைத்தீவை விட்டு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கிறது. என்று வளிமண்டலவியல் அதிகாரி சூரியகுமார் தெரிவித்தார்.

அவர் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

இதன் தாக்கத்தினால் நாட்டிலும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் இடையிடையே பலமான காற்று வீசும். (மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்).

அத்துடன் இலங்கைத்தீவைச் சுற்றியுள்ள ஆழ்கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே மீனவர் சமூகம் மற்றம் கடல்சார் தொழிலாளர்கள் தங்களது கடல் நடவடிக்கையை மேற்கொள்ளுவது பொருத்தமானதல்ல.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மழை காணப்படும்.

அதேவேளை கொழும்பு முதல் காலி வரையான ஆழ்கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும்.

Related Posts